உன் பூஜையும் யாகமும்
பூஜியமாய் போகும்;
செய்த ஜெபங்கள் எல்லாம்
வீணாய் போகும்;
தொழுகை எதுவும்
உன்னை தொடர்ந்து வராது!
மானுடா! விழித்தெழு!
கண் திற! உலகை பார்!
உண்டியலில் நீ போட்ட காசு
உன் இறைவன் கேட்டானா?
உண்ண இயலாமல் இருப்பவனை
வாழ வை - கோடி புண்ணியம் உனக்கு!
கண் கட்டி கடவுளை நம்பும் பித்தனே!
உன் கண் முன்னாள் இருக்கும்
வறுமையை ஒழி - அழி!
அன்று நீயே இறைவன் ஆவாய்!
இருக்கும் வரை இருளை போக்கு;
உன்னை சுற்றும் அநீதியை நீக்கு!
உயிர்கொல்லி மானுடர் அழியும் வரை தாக்கு!
உன்னை சுற்றி
பசி, பிணி;
விட்டது போதும்,
கிளம்பு இனி!
வீரன் பின்னால் என்றும்
தொடரும் மாபெரும் அணி!
சாதிகளை மிதி! மனிதனை மதி!
சுடர் ஒளி விடட்டும் உன் மதி!
உன்னால் மட்டும் மாற்ற முடியும்
இவ்வுலகின் தலை விதி!